‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ராவ் மருத்துவமனை உடன் இணைந்து நடத்தும்
பெண்களுக்கான ‘கருவுறாமை காரணங்களும் தீர்வுகளும்’ ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
செப்.8-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது
கரோனா தொற்று பரவாமல் இருக்கும் வகையில் வீடுகளிலேயே இருக்கும் பெண்கள் இணைய வழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ராவ் மருத்துவமனை உடன் இணைந்து நடத்தும் ‘கருவுறாமை காரணங்களும் தீர்வுகளும்’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் செப்.8-ம் (புதன்கிழமை) தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த பெண்களுக்கான ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வில், பெண் கருவுறாமைக்கான காரணங்கள், ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணம், தம்பதியருக்கு என்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும், ஆண் மலட்டுத்தன்மை போக்க என்ன செய்யலாம் என்பன உள்ளிட்ட பல முக்கியமான தலைப்புகளில் பல்வேறு ஆலோசனைகளை புகழ்பெற்ற மருத்துவர்கள் பங்கேற்று வழங்கவிருக்கின்றனர்.
இத்துறையில் பல்லாண்டுகால அனுபவமிக்க ராவ் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் தலைமை ஆலோசகர் டாக்டர் ஆஷா ராவ், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் குறித்தும், ராவ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் தாமோதர் ராவ், கருவுறுதல் மற்றும் மகளிர் மருத்துவம் எண்டோஸ்கோபி குறித்தும் ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். கட்டணம் ஏதும் கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு 9003966866 செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்