டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி சுகாதார விழிப்புணர்வுத் தொடர் வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் ‘இந்து தமிழ் திசை’ யூ-டியூப் பக்கத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
பள்ளி மாணவர்கள் மத்தியில் சிறந்த சுகாதாரப் பழக்க வழக்கங்கள் மற்றும் அன்றாட நடைமுறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணைய வழி தொடர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வில் ‘ஆரோக்கியமாக வாழ…’ எனும் நோக்கில் ‘வளமான வாழ்வுக்கு வழிகாட்டி’ எனும் 5 தலைப்புகளின் கீழ் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்தும், வாழ்வில் இவற்றை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை உணரும் வகையிலும் 15 வாரத் தொடர் நிகழ்வாக ஒளிபரப்பாகவுள்ளது. புகழ்பெற்ற குழந்தை நலன் மருத்துவர் ராதாலெட்சுமி செந்தில் பங்கேற்று, பல்வேறு சுகாதார விழிப்புணர்வு கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார்.
இதில் ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் ஒரு கேள்வி கேட்கப்படும். எந்த பள்ளியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பங்கேற்கிறார்களோ அந்த பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழோடு, சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த ‘சுத்தம் சுகாதாரம்’ ஆன்லைன் தொடர் நிகழ்வினை https://www.youtube.com/c/HinduTamilThisaiEvents என்ற லிங்க் - இல் , அனைவரும் பார்த்து பயன்பெறலாம்.
கீழ்க்கண்ட தேதிகளில் நிகழ்வு ஒளிபரப்பாகவுள்ளது.
**இந்த லிங்க் - இல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை அவசியம் பூர்த்தி செய்து அனுப்புங்கள்.
15 நிகழ்வுகளும் முடிந்த பிறகு, போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரம் தனித்தனியாக ரிவிக்கப்படும்.