Engineer Award 2022 (Civil & Structural)

About the Event

பொதுவாகக் கட்டுமானங்களும் கட்டமைப்புகளும் பெரும் நிறுவனங்களைச் சார்ந்த ஒன்றாகவே கருதப்படுகின்றன. இருப்பினும், அவை ஏதோ ஒரு பொறியாளரின் கனவில் / திறனில் உருவானவை என்பதை எவராலும் மறுக்க முடியாது. அந்தப் பொறியாளர்கள் தங்கள் தனித்துவத்தைக் கட்டுமானத்தையும் கட்டமைப்பையும் வடிவமைப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை. அவற்றின் உறுதியிலும், பேரிடர்களைத் தாங்கி நிற்கும் திறனிலும், புதிய தொழில்நுட்ப பயன்பாடுகளிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முன்னெடுப்புகளிலும் தங்கள் தனித்துவத்தை அவர்கள் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றனர்.

அவர்களில் பலர் பொதுவெளியில் இன்னும் அறியப்படாமல் இருக்கிறார்கள்.

அறியப்படாத பொறியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் சிறந்த பொறியாளர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு

கட்டிடக்கலை நுட்ப விருதுகள் மற்றும் ‘கட்டமைப்பு கலை நுட்ப விருதுகளை’ 'ராம்கோ சூப்பர்கிரீட் சிமெண்ட்' இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்

வழங்கவுள்ளது.

விருதுப் பிரிவுகள் 1. கிராமப்புற வீட்டுக் கட்டுமானம் 2. நகர்ப்புற குடியிருப்புக் கட்டுமானம் 3. பொதுச் சேவை கட்டமைப்புகள் (உதாரணங்கள்: பாலம், சாலை, மெட்ரோ ரயில் நிலையம், மருத்துவமனை) 4. பொதுப் பயன்பாடு கட்டமைப்புகள் (உதாரணங்கள்: பூங்கா, விளையாட்டு அரங்கம்) 5. தொழிற்சாலைக் கட்டமைப்பு

விருதுத் தேர்வுக்கான அம்சங்கள் 1. மாற்றுக் கட்டுமான பொருள்களைப் பயன்படுத்துதல் 2. சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம் (உதாரணம்: சூரிய ஆற்றலைப் பயன்படுத்துதல்) 3. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் 4. குறைவான கட்டுமான செலவு 5. மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த கட்டுமானம் 6. பேரிடரைத் தாங்கும் திறன்

யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த விருது நிறுவனத்துக்கானது அல்ல. குறிப்பிட்ட திட்டத்திற்குத் தலைமை வகித்த தனிநபருக்கானது. விருதுக்குத் தன்னைத் தகுதியானவர் என்று கருதும் நபரோ அல்லது அவரை அறிந்தவர்களோ அல்லது அவர் சார்ந்திருக்கும் நிறுவனங்களோ கூட பரிந்துரை செய்யலாம். விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர் கட்டிய கட்டுமானங்களும் கட்டமைப்புகளும் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டவைகளாக இருக்க வேண்டும். இத்துறையின் முன்னோடியான மூத்த பொறியாளர்கள் நடுவர்களாக இருந்து, விருதுக்கான பொறியாளர்களைத் தேர்வுசெய்ய இருக்கிறார்கள். தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் பொறியாளர்களே, விருதுக்குத் தயாராகுங்கள்.

விருதுக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரை செய்யும்போது, எந்தப் பிரிவுக்கான பரிந்துரை என்பதோடு, அதற்கான சான்றாதாரங்களையும் உடன் இணைத்து https://www.htamil.org/01045 என்ற லிங்கில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30 செப்டம்பர் 2022

This event is completed, please visit the home page for future events.

Copyright © 2022 KSL MEDIA LIMITED